Tamil Reader

இந்தியா: மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த இன்ப அதிர்ச்சி – ரிட்டர்ன் அனுப்ப முடியாமல் தவிக்கும் நல்லவர்..!

amazon_

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது நவீன காலத்தின் மகத்தான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் என்றாலும் சில நேரம் இது நம்மை சோதிக்கவும் தவறுவதில்லை. செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் பார்சல் வந்த கதையெல்லாம் நிறையவே நடந்திருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவருக்கு இது உல்டாவாக நடந்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட நபர் பிரபல ஆன்லைன் பொருள் விநியோகம் செய்யும் இணையதளமான அமேசானில் 396 ரூபாய் மதிப்புள்ள மவுத் வாஷ் ஒன்றிணை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி வந்த பெட்டியை திறந்துபார்த்தால் அதில் 13,000 மதிப்புள்ள ரெட்மி நோட் 10 போன் இருந்திருக்கிறது.

மவுத் வாஷ் நுகர்வுப் பொருள் என்பதால் அதனை அவரால் ரிட்டர்ன் செய்யவும் முடியவில்லை. தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியான முறையில் ஒட்டப்பட்டாலும் கட்டண ரசீது மற்றொருவருடையது என ஆன்லைனில் புகார் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் டிவிட்டரில் பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து பல நெட்டிசன்கள் இதுகுறித்து கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!