Tamil Reader

சமோசாவுக்காக தீக்குளித்து உயிரை விட்ட இளைஞர்- ம.பி.யில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ளது பந்தா எனும் கிராமம். இங்கு வசித்து வந்த 30 வயது இளைஞரான பஜ்ரு ஜெய்ஸ்வால் நண்பர்களுடன் எப்போதும் செல்லும் சமோசா கடைக்குச் சென்றுள்ளார். வழக்கமாக 2 சமோசாக்கள் 15க்கு ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் திடீரென 5 ரூபாயை உயர்த்தி 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளரிடம் ஜெய்ஸ்வால் கேட்டபோது கொரோனா ஊரடங்கு, விலைவாசி உயர்வால் சமோசாக்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத ஜெய்ஸ்வால் கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வேறு வழி தெரியாமல் கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜெய்ஷ்வால்

சம்பவம் குறித்து விசாரித்த அதிகாரிகள் ஜெய்ஸ்வால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மனமுடைந்த ஜெய்ஸ்வால் விரக்தியில் தீயிட்டு கொளுத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்ஸ்வால் மரணமடைந்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் மறைவுக்கு சமோசா கடை உரிமையாளரும் காவல்துறையினருமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஜெய்ஸ்வாலை போலீசார் அழைத்து மிரட்டியதே அவரது தற்கொலைக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்துள்ளனர். சமோசாவுக்காக ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க.!