Tamil Reader

பெண்ணிடம் அத்துமீற முயன்றவனுக்கு நேர்ந்த கதி – 2,000 பெண்களின் உடைகளை 6 மாதங்களுக்கு துவைக்க வைத்து தண்டனை!

பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் லலன் குமார் என்ற 20வயது இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்று கையும் களவுமாக பிடிபட்ட லலன் குமாருக்கு கிராம பஞ்சாயத்து வழங்கிய தண்டனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் கிராமத்தில் வசிக்கும் 2,000 பெண்களின் உடைகளை 6 மாதங்களுக்கு துவைத்துக் கொடுக்கும் பணியை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட லலன் குமார், தனது சொந்த செலவில் கிராம பெண்களின் உடைகளை துவைக்கும் பணியில் இறங்கியுள்ளார். நாள் முழுக்க துவைத்த வண்ணம் லலன் குமார் செயல்படுவதே அவருக்கான தண்டனை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இனி பெண்களை சீண்டும்போதோ, அவர்களிடம் அத்துமீறும்போதோ இந்த தண்டனை இதர ஆண்களுக்கு நினைவில் வர வேண்டும் என கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்த நூதன தண்டனை மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க.!