Tamil Reader

துபாயில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா; அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 1500 பேர் கண்காணிப்பு..!

Covid Cases in India

இந்தியா: மத்திய பிரதேசத்தில் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1500 பேரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மொரோனாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் துபாயில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த மாதம் 17-ம் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

துபாயில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக அவருக்கு COVID-19 தொற்று சோதனை நடந்ததாகவும், ஆனால் அதில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவரது தாய் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி தனது தாய் நினைவாக தங்கள் ஊரில் விருந்து ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்தில் 1500 பேர் பங்கேற்று உணவருந்தியுள்ளனர்.

அதை தொடர்ந்து, மார்ச் 25-ம் தேதி அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. பின்னர் அடுத்த சில நாட்களில் அவர் மருத்துவமனை சென்றுள்ளார். அவருக்கு COVID-19 மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் 11 பேருக்கு சோதனை நடந்தது. அடுத்தடுத்து நாட்களில் அவர்களுக்கும் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியே தற்போது அச்சத்தின் பிடியில் உறைந்துள்ளது. விருந்தில் கலந்து கொண்ட 1500 பேருக்கும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த இடத்தை முழுமையாக போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். பிற இடங்களில் இருந்து அங்கு மக்கள் வரவும், அந்த பகுதி மக்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தின் COVID-19 ‘ஹாட்ஸ்பாட்’ ஆக இந்த பகுதி மாறியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!