Tamil Reader

கோவிட்-19: இந்தியா பயணிக்கும் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.! பிப்ரவரி 22 முதல் அமல்..

india

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான சமீபத்திய கோவிட்-19 தடுப்பு விதிகள் பற்றி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Sars-CoV-2 என்ற உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் வகை பல நாடுகளில் வேகமாக பரவி அச்சுறுத்தி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் பிப்ரவரி 22-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. இனி அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயணத்திற்கு முன் செய்ய வேண்டியவை..

  • இந்தியா வரும் பயணிகள் அனைவரும் புறப்படும் முன் ஏர் சுவிதா போர்ட்டலில் (www.newdelhiairport.in) சுய விளக்க ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பயணிகள் தங்கள் பயண நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19 பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பயணிகளும் அறிக்கையின் நம்பகத்தன்மையைப் பொறுத்து ஒரு ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் குற்றவியல் வழக்குகளுக்கு பொறுப்பாவார்கள்.
  • பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் முன் பயணிகள் அரசாங்க நெறிமுறையின்படி, 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் அல்லது சுய கண்காணிப்புக்கு கட்டுப்படுவதாக ஆன்லைன் போர்ட்டலில் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

யாருக்கு பி.சி.ஆர் சோதனையிலிருந்து விலக்கு..

குடும்ப உறுப்பினர் ஒருவரின் இறப்பிற்காக இந்தியாவுக்கு பயணம் செய்பவர்கள் எதிர்மறை பி.சி.ஆர் சோதனை முடிவுக்கான தேவையை தவிர்க்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் பயணிப்பதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்பே ஏர் சுவிதா போர்ட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். ஆன்லைன் போர்ட்டலில் தொடர்புகொள்வதால் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.

போர்டிங்கிற்கு முன்..

  • ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து நெகட்டிவ் பி.சி.ஆர் சோதனை முடிவை பதிவேற்றிய பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • போர்டிங்கிற்கு முன் பயணிகள் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்
  • ஒருவேளை பயணிகள் யாருக்காவது கோவிட் -19-ன் அறிகுறிகள் இருக்குமானால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • எளிய பயணத்திற்கு ஆரோக்ய சேது பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய பயணிகள்
    அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • பயணிகள் தாங்கள் வந்திறங்கும் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற இடங்களுக்கு இணைக்கும் விமானங்களை பயன்படுத்த முன்பதிவு செய்யும் போது 6 முதல் 8 மணி நேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வருகை நடைமுறை..

  • பயணிகள் டிபோர்டிங் செய்யும் போது உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • விமான நிலையத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளால் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். வெப்ப பரிசோதனையின்போது அறிகுறி இருப்பதாக கண்டறியப்படுபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார நெறிமுறைகளின்படி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
  • பயணிகள் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன் அல்லது வேறு நகரங்களுக்கு செல்வதற்கான விமானங்கள் ஏறும் முன் கோவிட்-19 சோதனைக்கு ஒரு மாதிரியை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன் நெகட்டிவ் பி.சி.ஆர் சோதனை முடிவை வழங்குவதில் இருந்து விலக்கு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மத்திய கிழக்கு, இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவோருக்கான விதிமுறைகள்:

  • மேற்கண்ட இடங்களில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் மேற்கூறிய விதிகளோடு பின்வருவனவற்றையும் கடைபிடிக்க வேண்டும்.
  • கடந்த 14 நாட்களில் தங்களது பயண வரலாற்றை சுய அறிவிப்பு வடிவத்தில் வழங்க வேண்டும். அதே போல் அவர்கள் இந்தியா வந்தடையும் விமான நிலையத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்களா அல்லது வேறு நகரங்களுக்கு செல்ல அடுத்த விமானங்களை பயன்படுத்தப்போகிறார்களா என்று தெரிவிக்க வேண்டும்.
  • கடந்த 14 நாட்களில் பிரிட்டன், பிரேசில் அல்லது தென்னாப்பிரிக்காவிலிருந்து வருவோர் அல்லது இந்நாடுகள் வழியே பயணித்த சர்வதேச பயணிகளை விமான நிறுவனங்கள் அடையாளம் கண்டு பிரிக்க வேண்டும். அல்லது இந்த பயணிகளுக்கு உரிய நெறிமுறையைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு வசதியாக அவர்கள் இறங்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.அவர்கள் அனைவரின் சோதனை முடிவும் எதிர்மறையாக இருக்க வேண்டும்.

பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா தவிர பிற நாடுகளிலிருந்து வருவோருக்கு..

  • பயணிகள் வெளியேறுவதற்கு முன் நியமிக்கப்பட்ட பகுதியில் சோதனைக்கு ஒரு மாதிரியை கொடுக்க வேண்டும்.
  • சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர்கள் அடுத்த 7 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். இடைப்பட்ட நாட்களில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்கள்உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • சோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தால் அவர்கள் சுகாதார நெறிமுறையின்படி சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க.!