Tamil Reader

கொரோனா வைரஸ் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் குவைத், ஹாங்காங் விமானங்கள் ரத்து.!

Chennai Airport Passenger View

கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்குப் புறப்பட வேண்டிய மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து குவைத்திற்கு இன்று செல்ல இருந்த 4 விமானங்களும், குவைத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டிய ஒரு விமானமும், ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குவைத் மற்றும் ஹாங்காங்கிலும் அதிகரித்துள்ளதை அடுத்து இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ள நிலையில், விமான சேவைகளின் எண்ணிக்கையும் சர்வதேச அளவில் கடுமையாக சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!