Tamil Reader

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ; இந்து – முஸ்லிம் குடும்பங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்றது…!

Kidney Swap

இந்து மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்து குடும்பமும் மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பமும், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்நிகழ்வு மிகவும் அரிதான நிகழ்வாக சமூக வலைதள வாசிகளால் பேசப்பட்டு வருகிறது.

பீகார் சேர்ந்த மஞ்சுளா தேவி மற்றும் காஷ்மீர் சேர்ந்த அப்துல் அஸீஸ் ஆகியோர் நீண்ட நாட்களாக தங்களுக்கான டோனரை தேடி வந்த நிலையில், தற்போது இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

மஞ்சுளா தேவியின் கணவர் சுஜீத் குமாரின் சிறுநீரகம் அப்துல் அஸீஸ் அவருக்கு பொருந்தியது. அதே போல் அஸீஸ் அவர்களின் மனைவியின் ( சாசியா 50) சிறுநீரகம் மஞ்சுளா தேவிக்கு சரியாக பொருந்தியது இதனால் தான் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சாத்தியம் அடைந்தது, என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைவதாக சமூக ஆர்வலர்கள் பலர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

பஞ்சாப், மொகாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!