Tamil Reader

“வரதட்சணை வாங்கினால் வேலை பறிக்கப்படும்” – கேரள அரசின் அடுத்த அதிரடி!

தென்னிந்தியாவில் என்னதான் மூட நம்பிக்கைகள் ஒழிந்ததாகச் சொல்லப்பட்டாலும் வரதட்சணைக் கொடுமை நவீன வடிவங்களில் இன்னும் சமூகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Gujarat Woman Committs Suicide After Being Tortured For Dowry

கல்வி, பொருளாதாரத்தில் கேரள மாநிலத்தினர் சிறந்து விளங்கினாலும் வரதட்சணை விவகாரத்தால் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரள அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. கேரளாவில் அரசுப்பணியில் உள்ள ஆண்கள் திருமணம் முடிந்த கையோடு தந்தை, மனைவி, மாமனாரிடம் இருந்து கையொப்பம் பெற்று வரதட்சணை வாங்காததற்கான உறுதிமொழி பத்திரத்தை தங்கள் உயர் அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும். இதனை அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Historic victory in Kerala will certainly reinvigorate Left: Pinarayi Vijayan | Latest News India - Hindustan Times

இதன் மூலம் அரசுப் பணியில் இருப்பவர்கள் வரதட்சணை வாங்குவதில் இருந்து தடுக்கப்படுவர். படிப்படியாக மாநிலம் முழுவதும் வரதட்சணை தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு முற்றிலும் இதனை ஒழித்துக்கட்ட கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. இனி வரதட்சணை வாங்கினால் அரசு வேலை பறிபோய்விடும் எனும் அச்சமும் ஆண்கள் மத்தியில் உருவாகியிருப்பது பிற மாநில அரசுகளையும் யோசிக்க வைத்துள்ளது!

இதையும் படிங்க.!