Tamil Reader

கேரளாவில் COVID-19 வைரஸுக்கு துபாயில் இருந்து வந்தவா் முதல் பலி..!

Coronovirus First Death Case in Kerala

இந்திய மாநிலம் கேரளாவில் துபாயில் இருந்து வந்தவா், கொரோனா வைரஸுக்கு முதல் பலியாகியுள்ளார்.

இந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள், மும்பைக்கு அடுத்து அதிகப்படியாக கேரளாவில் உள்ளனர். இங்கு 1,14,500 போ் கண்காணிப்பில் வைக்கபட்டுள்ளனா். 620 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 164 பேருக்கு COVID-19 பாதிப்பு உறுதி செய்யபட்டு அரசு மருத்துவமனைகளில் COVID-19 வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 28ஆம் தேதி, எா்ணாகுளம் கழமசேரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான ஒருவா் உயிரிழந்தார்.

மட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த அவர், கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து எா்ணாகுளம் நெடுமாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கி அங்கிருந்து வாடகை கார் மூலம் வீட்டிற்கு வந்தார்.

பின்னா் உடல் நிலை சரியில்லாததால் கழமசேரி அரசு மருத்துவமனையில் COVID-19 வார்டில் அனுமதிக்கபட்டியிருந்தார்.

இதனையடுத்து, அவருடைய மனைவி உட்பட 3 போ் தனிமைபடுத்த பட்ட நிலையில் மனைவிக்கு COVID-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டு அவரையும் வார்டில் அனுமதித்தனர்.

மேலும், அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த வாடகைகார் டிரைவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!