Tamil Reader

“இந்த முறை கேரளாவில் பாஜகவை காலி செய்வோம்” – சொல்லி அடித்த பினராயி விஜயன்..!

ldf-shatters-keralas-40-year-record-pinarayi-vijayan-now-the-marxist-helmsman

தமிழகத்தைப் போலவே கேரள சட்ட மன்றத்திற்கும் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது.

கேரளாவைப் பொறுத்தவரையில் ஆட்சியதிகாரம் என்பது ஒவ்வோரு 5 வருடத்திற்கும் மாறும். அம்மக்கள் அப்படித்தான் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். கடந்த 44 ஆண்டுகளாக இதே நிலைமை தான். ஆனால் அதை பினராயி விஜயன் உடைத்திருக்கிறார்.

அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சரான ஷைலஜா டீச்சர், கேரள வரலாற்றிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்னும் பெயரை இந்தத் தேர்தல் மூலம் சம்பாதித்திருக்கிறார். ஷைலஜா 60,963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்திருக்கிறார். அதேபோல, முதல்வரான பினராயி விஜயனும் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.

மொத்தமாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 91 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கிடைத்துள்ளன.

இந்த வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நேமம் தொகுதியில் கும்மனம் ராஜசேகரன் என்னும் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றிருந்தார். இதுகுறித்துப் பேசியிருந்த பினராயி விஜயன்,” கடந்த 5 வருடத்திற்கு முன்பு நேமம் தொகுதியில் பாஜக தனது அக்கவுண்டைத் தொடங்கியது. ஆனால், இம்முறை அதனை நாங்கள் கைப்பற்றுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதைப்போலவே, கம்யூனிஸ்ட் கட்சியின் சிவன் குட்டி இம்முறை பாஜகவின் ராஜசேகரனை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பாஜக-வின் பிரதிநிதிகள் இல்லாத சட்டமன்றம் கேரளாவில் உருவாக இருக்கிறது.

இதையும் படிங்க.!