Tamil Reader

சிக்கன் ருசியாக இல்லாததால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவர்!

பெங்களூரில் மனைவியை கணவன் அடித்துக் கொன்று உடலை ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரபனஹல்லி பகுதியைச் சேர்ந்த 32 வயதான முபாரக் சிக்கன் சமைத்துக் கொடுத்த மனைவியிடம் ருசியாக இல்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மோதல் முற்றியதால் ஆத்திரத்தில் 28 வயதான தனது மனைவி ஷிரின் பானுவை மரக்கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். இதில் அவர் உயிரிழக்கவே அதிர்ச்சியடைந்த முபாரக் செய்வதறியாது உடலை ஒரு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசியுள்ளார். ஷிரினின் பெற்றோரிடம் அவர் வீட்டை விட்டு ஓடிச் சென்றதாக கதை கட்டியுள்ளார். சந்தேகமடைந்த அவரது பெற்றோர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை அம்பலமானது. இதையடுத்து முபாரக்கை கைது செய்த போலீசார் ஆற்றில் வீசப்பட்ட ஷிரினின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க.!