Tamil Reader

நீதிபதியை திருட்டு ஆட்டோ மூலம் தீர்த்துக்கட்டிய கும்பல் – ஜார்கண்டில் நடந்த கொடூரம்!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று சாலையோரம் சென்ற உத்தம் ஆனந்த் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Dhanbad judge death: Jharkhand HC says case sensitive, needs to be probed | Latest News India - Hindustan Times
உத்தம் ஆனந்த்

முதலில் இந்த சம்பவம் விபத்து என்றே நம்பப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று நடைப்பயிற்சியில் ஈடுபட்ட உத்தம் ஆனந்தை வேண்டுமென்றே ஆட்டோவை மோத விட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் லக்கன் குமார் வர்மா, அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். நீதிபதியை கொலை செய்வதற்கு முன்பு ஆட்டோவை ஒரு இடத்தில் இருந்து திருடி வந்ததும் அம்பலமாகியுள்ளது.

Dhanbad judge killing: two, including auto driver, held - The Hindu
விபத்து நடந்த காட்சிகள்
கொலைக்கான காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், தன்பாத் நகரில் மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரித்து வந்துள்ளார். சமீபத்தில் மாபியா கும்பலைச் சேர்ந்த 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார். அதனால், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Supreme Court swings into action after Jharkhand judge's death - The Hindu
Credit : The Hindu
நீதிபதிகள் கண்டனம்

நீதிபதி கொலை செய்யப்பட்டதற்கு ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ரவி ரஞ்சனும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை போலீசார் துரிதமாக விசாரிக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீதிபதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்பு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது

இதையும் படிங்க.!