Tamil Reader

அந்த பேருக்கு நான் எங்க போறது…. நீரஜ் என பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்!

இந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவும் எகிறிப்போயுள்ளது. நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ‘நீரஜ்’ என பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமென தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அறிவித்துள்ளது.

Maalaimalar News: Tamil News 2 liters of petrol is free for those with Neeraj name
நீரஜ் சோப்ரா

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், திருமாநிலையூரிலுள்ள அரவிந்த் ஏஜென்ஸீஸ் பெட்ரோல் பங்கில், அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “நீரஜ்” என பெயர் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்தால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசமென்றும், இச்சலுகை 3 நாட்களுக்கு மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரஜ் என்பது வடமாநில சொல் என்பதால் குறைந்த அளவிலான மக்களே இந்த சலுகையை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க.!