Tamil Reader

வீரர்களை விரட்டும் கொரோனா : IPL போட்டிகளை ஒத்திவைப்பதாக BCCI அறிவிப்பு..!

IPL_trophy_BCCI1_

கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாலும், இதுவரையில் பல்வேறு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாலும் இந்த வருடத்திற்கான IPL போட்டிகளை ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வீரர்கள் அனைவரும் பையோ பப்புள் எனப்படும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்குமாறு முன்னதாகவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியியைச் சேர்ந்த தமிழக வீரரான வருண் சக்கரவத்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. ஆனால், அந்த அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். இதனால் நேற்று நடைபெற இருந்த பெங்களூர் – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே சென்னை வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்திருக்கிறது.

அதேபோல, ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விரிதிமான் சாஹா மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ரா ஆகியோருக்கு இன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. இப்படி வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் நடப்பு IPL போட்டியை ஒத்திவைப்பதாக BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இன்று அறிவித்தார்.

நடப்பு IPL தொடரில் இதுவரையில் 29 லீக் ஆட்டங்கள் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க.!