Tamil Reader

இந்தியாவின் டாப் 10 கடற்கரைகள் – வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடங்கள்!

கடற்கரைப் பகுதியின் தூய்மை, பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உலகின் முக்கியமான கடற்கரைகளுக்கு நீலக்கொடி (Blue Flag) அங்கீகாரம் டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. உலகில் உள்ள சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த 4,600-க்கும் மேற்பட்ட கடற்கரைகள் இதுவரை நீலக்கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன. இந்தியாவில் இதுவரை 10 கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கண்டு ரசிக்க வேண்டிய டாப் 10 கடற்கரைகள்!

10. ஈடன் கடற்கரை, புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஈடன் கடற்கரை கடல் பிரியர்களுக்கு நல்லதொரு சாய்ஸ். ECRஐ காண விரும்புவோர் புதுச்சேரிக்கு காரிலோ பைக்கிலோ சென்று வர எண்ணினால் கட்டாயம் ஈடன் கடற்கரையையும் கண்டு களிக்கலாம். வெள்ளை நில கடற்கரை மணலும் உயரமான தென்னை மரங்களும் உங்களை வரவேற்க காத்திருக்கும்

TN's Kovalam, Puducherry's Eden beaches awarded 'Blue Flag' eco tags | The News Minute

9. கோவளம், சென்னை

தமிழ்நாட்டில் ஒரு கடற்கரை கூட நீலக்கொடி அங்கீகாரம் பெறவில்லை என எழுந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னையை அடுத்து அமைந்துள்ள கோவளம் கடற்கரை. அண்மையில் இந்த கடற்கரை நீலக்கொடி அங்கீகாரம் பெற்றது. அலைசறுக்கு, நீச்சல் உள்ளிட்ட கடல் விளையாட்டுகளுக்கு பெயர் போன கோவளம் கடற்கரையில் நீங்கள் உங்கள் பொழுதுகளை இனிமையாக கழிக்கலாம். இந்தியாவின் கிழக்கு கடற்கரைகளில் மிக முக்கிய எழில் நிறைந்த கடற்கரைகளுள் ஒன்றாக திகழ்கிறது கோவளம்

Surfing School - Surfing Covelong Point - Chennai, India

8. ராதாநகர், அந்தமான்

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் அமைந்துள்லது ராதாநகர் கடற்கரை. கிரிஸ்டல் கிளியராக காட்சியளிக்கும் இந்த கடற்கரை நல்லதொரு ஹனி மூன் ஸ்பாட்டாக திகழ்கிறது. ஸ்கூபா டைவிங்கும் இந்த கடற்கரையில் உள்ளதால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். மற்ற கடற்கரைகளை போன்றல்லாம் பார்ப்பதற்கே கண்ணாடியை போல பளிச்சென தெரியும் இந்த கடற்கரை கடல் பிரியர்களின் கண்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

Radhanagar Beach (No 7), Havelock Island, #India. It takes a special permit, 2 planes, a boat or … | Beaches in the world, Andaman and nicobar islands, Andaman tour

7. கோல்டன் பீச், ஒடிசா

ஒடிசாவின் புரி பகுதியில் அமைந்துள்ளது கோல்டன் பீச். அலைச் சறுக்கிற்கு ஏற்ற இடமான இந்த கடற்கரை, தங்க நிறத்தினாலான கடற்கரை மண் நிறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு எப்போதுமே அதிகம்தான்

Sudarsan Pattnaik on Twitter: "Today I am very happy to know that our Golden beach of Puri , Odisha have bagged the coveted #BlueFlag Certification . where I am doing SandArt more

6. ருஷிகொண்டா, ஆந்திரா

கடற்கரையை சுற்றி மாமரங்கள் இருந்தால் எப்படி இருக்கு. அலையுடன் கொஞ்சி விளையாடிவிட்டு மாம்பழத்தை ருசித்தால் அதில் கிடைக்கும் சுகமே தனி அல்லவா. இதனை செய்து பார்க்க விரும்புவோர் நிச்சயம் ஆந்திராவில் உள்ள ருஷிகொண்டா கடற்கரைக்குச் செல்லாம். கடற்கரையை சுற்றி மாமரங்களும், பனை மரங்களும் அதிகளவில் இருக்கும். கடற்கரையில் ஆங்காங்கே பாறைகளும் இருப்பதால் புகைப்படம் எடுப்பதற்கு இதுவரை சிறந்த இடம்

Rushikonda Beach - Wikipedia

5. கப்பாட், கேரளா

அண்டை மாநிலமான கேரளாவில் அமைந்துள்ள கப்பாட் கடற்கரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முதல்முறையாக இந்தியாவை கண்டுபிடித்த போர்ச்சுகல் கப்பலோட்டி வாஸ்கோடகாமா தனது படைப்பட்டாளத்துடன் முதன்முதலில் வந்திறங்கியது இந்த கப்பாட் கடற்கரைக்குத்தான். சுற்றுலாவுடன் வரலாற்றை நினைவுகூற விரும்புவோர் கப்பாட் கடற்கரைக்குச் சென்று வரலாம்

Kappad Beach Kerala | Famous Beaches in Kerala - HappyTrips | Times of India Travel

4. பதுபித்ரி, கர்நாடகா

கர்நாடக மாநிலம் பதுபித்ரி கடற்கரை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளை நில மணலும், பளிச்சென தெரியும் கடலும் இந்த கடற்கரையின் தனி ஸ்பெஷலாக திகழ்கிறது

Padubidri Beach (Udupi) - 2021 What to Know Before You Go (with Photos) - Tripadvisor

3. காசர்கோட், கர்நாடகா

கர்நாடக மாநிலம் காசர்கோட்டில் அமைந்துள்ள கடற்கரை கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. செம்மண் நிறைந்த கடற்கரை மணல் உலகின் இதர கடற்கரைகளை காட்டிலும் தனித்து நிற்கிறது

Bekal Beach | Karwar Beach Kasaragod Kerala | Kerala Tour Operator

2. கோக்லா, டையு

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டையுவில் உள்ள கோக்லா கடற்கரை. கோக்லா கிராமத்தையொட்டி அமைந்திருப்பதால் கலாச்சார, பண்பாட்டின் அடையாளமாகவே திகழ்கிறது. மேற்கத்தியர்களின் படையெடுப்பின்போது கட்டப்பட்ட மாளிகைகள், கோட்டைகள் இந்த கடற்கரையில் அமையப்பெற்றுள்ளதால் சுற்றுலா பயணிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று

Ghogla Beach | UT of Dadra and Nagar Haveli and Daman and Diu | India

1. சிவ்ராஜ்புர், குஜராத்

குஜராத் மாநிலம் சிவ்ராஜ்புரில் உள்ள கடற்கரை இந்தியாவின் தலைசிறந்த கடற்கரைகளுள் ஒன்றாக திகழ்கிறது. கலங்கரை விளக்கம் அமைந்துள்ளதால் பார்ப்பதற்கு சிறந்து விளங்குகிறது. அவ்வப்போது கடற்கரையையொட்டி டால்ஃபின்களும் துள்ளி குதித்து விளையாடுவது காண்போருக்கு பரவசத்தை ஏற்படுத்தும்.

Shivrajpur Beach

 

இதையும் படிங்க.!