Tamil Reader

NRI வாக்குரிமை மனுவை ஒத்திவைத்தது இந்திய உச்ச நீதிமன்றம்.!

supreme court

என்.ஆர்.ஐ வாக்குரிமை மீதான மனு குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கும் என்று வழக்கறிஞர் ஹரிஸ் பீரன் கூறினார்.

மேலும் பீரன் கூறும்போது, “நீதிமன்றம் ஏப்ரல் மாதத்தில் இந்த மனுவை விசாரிப்பதன் மூலம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை இறுதியாக முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.

வெளிவிவகார அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 3.10 கோடி என்.ஆர்.ஐ வசிக்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற தேதி ஒன்றில் 10,000 – 12,000 வெளிநாட்டு வாக்காளர்கள் மட்டுமே தங்கள் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று என்.ஆர்.ஐ வாக்களிப்பதற்காக ஆதார் அட்டையை தேர்தல் அடையாள அட்டையுடன் இணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் மற்றொரு ஊடக அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-மெட்ராஸுடன்(IIT-M) இணைந்து டிஜிட்டல் சாதனம் மூலம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் வெளிநாட்டிற்கு புலன்பெயர்ந்தோர்(migrants), அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வாக்களிக்க முடியும்.

முன்னதாக 2018 ஆகஸ்டில் என்.ஆர்.ஐ வாக்களிக்கும் உரிமையை வழங்கும் மசோதாவை மக்களவை நிறைவேற்றியிருந்தாலும், 16வது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அது தோல்வியடைந்தது.

பின்னர் 2019 ஜூன் மாதத்தில், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்ற செய்தி வெளிவந்த நிலையிலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

வக்கீல் பீரன், ஆறு ஆண்டுகால மனுவில் இன்று வரை நிறைவேற்றப்பட்ட உத்தரவுகளின் தொகுப்பை சமர்ப்பித்ததாகக் கூறினார், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். இந்தத் தொகுப்பில் உச்சநீதிமன்றமானது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உரிய வழிமுறைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கியுள்ளது.

என்.ஆர்.ஐ வாக்குரிமை மீதான பொது நலவழக்கு தொடர்ந்த வி.ஆர்.எஸ் ஹெல்த்கேரின் நிறுவனர், நிர்வாக இயக்குநர், என்.ஆர்.ஐ தொழில்முனைவோருமான டாக்டர் ஷம்ஷீர் வயலில்(Shamsheer Vayalil)கூறும்போது, “நீதிமன்றம் முன்னோக்கி செல்லும் வழியில் தீர்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன். இது நடைமுறைப்படுத்தப்பட்டதும், மில்லியன் கணக்கான என்.ஆர்.ஐ.க்கள் தங்கள் வாக்குரிமையை எல்லைக்கு அப்பால் உள்ள பணியிடங்களிலிருந்து பயன்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்” என்றார்

மேலும் அவர் கூறுகையில், “இது ஒரு நியாயமான கோரிக்கை. தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபரின் உரிமையாகும். இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இப்போது நீதிமன்றம் ஒரு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!