உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் பெரிய சவாலாக மாறி கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது இந்திய அரசு. அவர்கள் குணமான இவ்வேளையில் தற்போது அந்த வரிசையில் மேலும் இரண்டு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் இன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளது.
Update on #COVID19:
Two positive cases of #nCoV19 detected. More details in the Press Release.#coronoavirusoutbreak #CoronaVirusUpdate pic.twitter.com/kf83odGo8f
— Ministry of Health (@MoHFW_INDIA) March 2, 2020
பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர், தெலங்கானவை சேர்ந்தவராவார். அவர் சமீபத்தில் துபாய் பயணம் மேற்கொண்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவர், இத்தாலி நாட்டிற்கு சென்று திரும்பிய டெல்லியை சேர்ந்தவர் ஆவார்.
மேலும் இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.