ஷேக் சுல்தான் பின் சயீத் அவர்களின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரதிநிதி ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நேற்று காலமானார். அவர்களின் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இந்த துயரமான தருணத்தில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அல் நஹ்யான் குடும்பத்தினருடனும் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மக்களிடமும் உள்ளன” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
I offer my deepest condolences to HH Sheikh Khalifa bin Zayed Al Nahyan, President of the UAE, on the demise of HH Sheikh Sultan bin Zayed Al Nahyan. In this moment of grief, our thoughts and prayers are with the Al Nahyan family and the people of UAE.
— Narendra Modi (@narendramodi) November 19, 2019