Tamil Reader

ஒரே நேரத்தில் 4 ஆண்களுடன் காதல் : சீட்டு குலுக்கி கணவரைத் தேர்ந்தெடுத்த உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்..!

marriage

உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீட்டு குலுக்கிப் போட்டு தனது கணவரைத் தேர்ந்தெடுத்ததுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்.

காதல்… ஓட்டம்..

ராம்பூரைச் சேர்ந்த அந்த பெண், தனது காதலருடன் மன்னிக்கவும் காதலர் ஒருவருடன் ஊரைவிட்டு ஓடியிருக்கிறார். இதனையறிந்த மற்ற மூன்று காதலர்களும் செய்வதறியாது திகைத்தனர். ஊர் பெருசுகளிடம் சொல்லி, பஞ்சாயத்து நடத்தி இருண்டுபோன தங்களது வாழ்க்கையில் டார்ச் அடிக்குமாறு மன்றாடியிருக்கிறார்கள்.

புறங்கால் பொடனியில் அடிபட ஓடிக்கொண்டிருந்த காதல் ஜோடியை, கப்பென்று பிடித்துக்கொண்டு வந்து பஞ்சாயத்தில் நிறுத்தியிருக்கிறது அந்த ஊர் படை.

நான்கு பேரையுமே தான் மனப்பூர்வமாக விரும்புவதாக அந்தப் பெண் தெரிவிக்க பஞ்சாயத்து வெலவெலத்துப் போயிருக்கிறது. வேறுவழியில்லாமல் ஒவ்வொரு காதல் கதையையும் பொறுமையாகக் கேட்ட பஞ்சாயத்து தலைவருக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்திருக்கிறது. இறுதியில் தலைவன் வடிவேலு பாணியில் சீட்டுக் குலுக்கி போட்டு துணையைத் தேடிக்கொள் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பஞ்சாயத்து தலைவர் உதிர்த்திருக்கிறார். இப்படியான தீர்ப்பை கேட்டு ஊர் மக்கள், திகைத்து நிற்பதற்குள் நான்கு காதலர்களின் பெயர்களும் சீட்டில் எழுதப்பட்டு குலுக்கப்பட்டுவிட்டது.

அந்தப் பெண்ணே, அதில் ஒன்றை எடுத்து தனது கணவர் இவர்தான் என கன்ஃபார்ம் செய்துள்ளார். ஆனால் சீட்டில் வந்த பெயர் பண்ணி பண்டாரமா, பூனை மணியா, சாரப்பாம்பா அல்லது மாட்டு ரவியா என்பதுதான் தெரியவில்லை.

இதையும் படிங்க.!