Tamil Reader

இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதில் வந்த சண்டை : காதலியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த நபர்..!

fire_1

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அன்சல் பகுதியில் வசித்துவந்த காதல் தம்பதி ஆதிரா – ஷாநவாஸ். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக இணைந்து வந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை ஒன்றும் இருக்கிறது.

இதனிடையே சமீபத்தில் ஆதிராவால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் விவகாரத்தில் இருவருக்குள்ளும் மோதல் வெடித்திருக்கிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக சண்டை மாறியிருக்கிறது. ஆத்திரம் தாங்காமல் ஆதிராவின் மீது மண்ணெணெய் ஊற்றி பற்றவைத்திருக்கிறார் ஷாநவாஸ். இதனால் படுகாயமடைந்த ஆதிரா திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஷாநவாஸ்-க்கும் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அவரது உடம்பில் 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆதிரா சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்.

இதனையடுத்து ஆதிராவின் தாயார், ஷாநவாஸ் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!