Tamil Reader

விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கட்டணத்தினை உயர்த்தியது இந்திய அரசு..!

FLIGHT

வெளிநாடு மற்றும் இந்தியாவிற்குள் விமானப் பயணங்களில் ஈடுபடுவோருக்கான விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கட்டணத்தை (ASF) உயர்த்துவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்குவரும் என மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோர் ASF கட்டணமாக இதுவரையில் $4.85 செலுத்திவந்த நிலையில், இனிமேல் இக்கட்டணம் $5.2 ஆக இருக்கும் எனவும், உள்நாட்டுப் பிரயாணிகள் 160 ரூபாயை ASF கட்டணமாக (தற்போது 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது) செலுத்தவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதன்மூலம் விமான நிறுவனங்களால் பெறப்படும் இந்த ASF கட்டணம், பின்னர் அரசிற்குச் செலுத்தப்படுகின்றன. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டும் இந்த ASF கட்டணத்தை விமானப் போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு ஜூன் 7 முதல் உள்நாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுவந்த ASF கட்டணத்தை 130 லிருந்து 150 ஆக உயர்த்தியது அமைச்சகம். அதேபோல, 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர்க்கு ASF கட்டணமானது $3.25 லிருந்து $4.85 ஆக உயர்த்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!