Tamil Reader

புது போன் வாங்கித் தராததால் பாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்ற பேரன் – உத்திரப் பிரதேசத்தில் குரூரம்..!

teen-holding-cell-phone

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சச்சின் தனது பாட்டியிடம் பணம் கேட்டிருக்கிறார்; புது ஆண்ட்ராய்டு போன் வாங்குவதற்காக. பணமெல்லாம் தர முடியாது என்ற பாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார் சச்சின்.

பாட்டிக்கு மாரடைப்பு என அனைவரையும் நம்பவும் வைத்துவிட்டார். பாட்டியின் இறுதிச் சடங்குகளும் அடுத்தநாள் நடந்து முடிந்திருக்கின்றன. இருப்பினும் உண்மையை வெகுநாள் மறைக்க முடியாதல்லவா? சச்சினின் நடத்தையில் சந்தேகப்பட்ட உறவினர் ஒருவர் பாட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்.

இந்த வழக்கை காவல்துறை விசாரித்ததில் சச்சின் தனது நண்பர்களான ஹனி, ஜாக்கி ஆகியோருடன் சேர்ந்து பாட்டியை கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. மூவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கோபமான பாட்டியை சமாதானப்படுத்த நண்பர்களை வரவழைத்திருக்கிறார் சச்சின். வாக்குவாதம் முற்றியதால் கோபமான சச்சின் பாட்டியை கொலை செய்திருக்கிறார். அட்ரௌலி காவல்நிலைய அதிகாரி சஞ்சய் ஜெயிஸ்வால் இதுகுறித்துப் பேசுகையில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!