Tamil Reader

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 ஆம் தேதிவரை நீட்டிப்பு..!

flight

சென்ற வருடம் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததையோட்டி சர்வதேச விமானங்களுக்கான தடையை இந்திய அரசு அறிவித்தது. பல மாதங்களாக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது மே 31 ஆம் தேதிவரையில் இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்திய அரசின் அனுமதியோடு இயக்கப்பட்டுவரும் சிறப்பு விமானங்களுக்கு இந்தத்தடை பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில்,  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் சரக்கு விமானங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவரும் வேளையில் இந்தியாவில் இருந்து பயணிகள் வர இதுவரையில் 14 நாடுகள் தடைவிதித்துள்ளன. அவை என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.!