Tamil Reader

துபாய் வழியாக இந்தியா வந்தவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி..!

omicron

தென்னாப்பிரிக்காவிலிருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பைக்கு பயணம் செய்த 33 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு, குஜராத்தில் ஏற்கனவே 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதியில் இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து கிளம்பி துபாய் வழியாக டெல்லிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்கிருந்து மும்பை சென்றிருக்கிறார்.

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இந்தியாவில் ஒமைக்ரான் பரவிவருவது மக்களிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க.!