Tamil Reader

இந்தியா வெளியிட்ட “ரிஸ்க்” நாடுகளின் பட்டியல்: பயணிகளுக்கான நடைமுறை கட்டுப்பாடுகள் என்ன?

தொற்றுநோய் ஆபத்து அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தியா வகைப்படுத்திய ஆபத்தில் இருக்கும் நாடுகளின் சமீபத்திய பட்டியல்:

  • UK உட்பட ஐரோப்பாவில் உள்ள நாடுகள்
  • தென்னாப்பிரிக்கா
  • பிரேசில்
  • போட்ஸ்வானா
  • சீனா
  • கானா
  • மொரிஷியஸ்
  • நியூசிலாந்து
  • ஜிம்பாப்வே
  • தான்சானியா
  • ஹாங்காங்
  • இஸ்ரேல்
  • காங்கோ
  • எத்தியோப்பியா
  • கஜகஸ்தான்
  • கென்யா
  • நைஜீரியா
  • துனிசியா
  • ஜாம்பியா

மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், கோவிட்-19 பரிசோதனைக்கு பிந்தைய பரிசோதனை எனப்படும் Post-arrival பரிசோதனைக்காக தங்கள் மாதிரிகளை அவர்களே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தையும் அவர்களே ஏற்க வேண்டும்.

இந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்திற்கும் வரும் பயணிகள் 72 மணிநேரத்திற்கு மேல் செல்லாத “நெகடிவ்” கோவிட்-19 ரிப்போர்ட்டை காட்ட வேண்டும்.

நெகட்டிவ்

பயணிகளுக்கு சோதனை முடிவு “நெகட்டிவ்” வந்தால், அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டுத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள். பின்னர் 8வது நாளில் RT-PCR சோதனை மேற்கொள்ளப்படும்.

மீண்டும் “நெகட்டிவ்” முடிவு வரும் பட்சத்தில், அடுத்த 7 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை தாங்களே கண்காணித்து கொள்ள வேண்டும்.

பாசிடிவ்

விமான நிலையம் அல்லது தனிமை முடிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு “பாசிடிவ்” முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் இட வசதிக்கு அனுப்பப்படுவார்கள்.

பாதிக்கப்பட்ட பயணிகளின் நெருங்கிய தொடர்புகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

முக்கிய விமான நிலையங்கள்

மேலும், இந்தியாவின் ஆறு முக்கிய விமான நிலையங்களில் ஒன்றிற்கு வந்தால், அவர்கள் PCR சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். அவை டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா.

முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான சோதனைகளின் முன்பதிவு பொறுப்பை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏற்கும். அதில் “பாசிடிவ்” முடிவு வந்தால் “கடுமையான தனிமைப்படுத்தலை” பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க.!