ஆகஸ்டு அல்லது செப்டம்பருக்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அளவில் சர்வதேச விமானங்களை இயக்க இந்தியா முயற்சிக்கும் என இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். முன்னதாக மே 23 ஆம் தேதியன்று இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தியதால், கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து பேஸ்புக் நேரலையில் பேசிய பூரி,” ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு முன்னர் அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்துகளையும் அனுமதிக்க முடியாது எனினும் குறிப்பிடத்தக்க அளவிலான சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.
“சர்வதேச விமானங்களை மீண்டும் இயக்கும் தேதியை அறுதியிட்டு கூற முடியாது. அதே வேளையில் ஆகஸ்டு அல்லது செப்டம்பருக்கு முன்னர் இவ்விமானங்கள் இயக்கப்படும் என யாரேனும் சொன்னால், சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்பதே என் பதிலாக இருக்கும்” என்றார்.