Tamil Reader

முக்கியச் செய்தி: சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு மீண்டும் தடை – இந்திய அரசு அறிவிப்பு..!

கொரோனா காரணமாக கடந்த 202O ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்தது.

பின்னர் ஒன்றரை ஆண்டுகள் கழித்து வரும் டிசம்பர் 15, 2021 ஆம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கப்படும் என கடந்தவாரம் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி டிசம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கப்படாது என DGCA அறிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் சிறப்பு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாகவும் டி.ஜி.சி.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சரக்கு விமான போக்குவரத்தை இந்த தடை பாதிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!