Tamil Reader

இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தடை விதித்திருக்கும் 14 நாடுகளின் பட்டியல்..!

Airport (2)

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இது ஒருபுறம் என்றால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால் பல மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவே மறுக்கின்றன.

ஆக்சிஜன் கிடைப்பதை யாராவது தடுத்தால் தூக்கிலிடுவோம் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அந்த அளவிற்கு விஷயம் கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

இப்படி பெரும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவில் இருந்து மக்கள் வரத் தடை விதித்துள்ளதாக இதுவரையில் 14 நாடுகள் அறிவித்துள்ளன. அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.

  1. பாகிஸ்தான்
  2. அமெரிக்கா
  3. ஐக்கிய ராஜ்ஜியம்
  4. நியூசிலாந்து
  5. ஹாங்காங்
  6. சிங்கப்பூர்
  7. ஓமான்
  8. பிரான்ஸ்
  9. அமீரகம்
  10. சவூதி அரேபியா
  11. கனடா
  12. குவைத்
  13. நெதர்லாந்து
  14. தாய்லாந்து

இதையும் படிங்க.!