Tamil Reader

100 பேருக்கு கொரோனாவைப் பரப்பிய கோலாகலக் கல்யாணம் – தாலி கட்டிய கையோடு தனிமைப்படுத்தப்பட்ட மாப்பிள்ளையும் மணப்பெண்ணும்..!

marriage

கொரோனாவுக்கு மத்தியில் கோலாகலமாக நடந்த கல்யாணத்தினால் அதில் கலந்துகொண்ட 100 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மணப்பெண்ணின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார். இந்த கொரோனா கல்யாணம் நடந்தது தெலுங்கானாவில்.

அம்மாநில அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி திருமண வைபவங்களில் 40 பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும். ஆனால் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கல்யாணத்தில் 250 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட ஒருவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவுடனேயே அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

முடிவில் புதுமணத்தம்பதி உட்பட 100 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவரவே, மணமகன் மற்றும் மணப்பெண் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருமணத்தின்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யாரும் பின்பற்றாததன் காரணமாகவே தொற்று வேகமாகப் பரவியிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிராம மக்களிடையே தொற்று பரவாமல் இருக்க முயற்சிகள் எடுத்துவருவதாக அம்மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!