Tamil Reader

இந்தியாவின் புதிய பட்ஜெட் 2020: என்.ஆர்.ஐ-களுக்கு பாதிப்பா.?

NRI Indians

கடந்த சனிக்கிழமை (February 01 2020), 2020-2021 ஆண்டிற்கான இந்திய நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட NRI-களுக்கான 120 நாள் விதியினால் வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றிய தொகுப்பு தான் இந்த பதிவு.

இந்தியாவிற்கு வெளியே இருந்து வேறு நாட்டிலிருந்து சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும், குடியேறிய இந்தியர்கள் (NRI) சமீபத்திய இந்திய பட்ஜெட்டில் புதிய வரி முன்மொழிவுகளால் பாதிக்கப்படமாட்டார்கள்.

அவர்கள் பணிபுரியும் நாட்டில் அவர்கள் வசிக்கும் நிலை (Resident status) மற்றும் அந்தந்த நாடுகளில் பெரும்பாலானவற்றுடன் இந்தியா வைத்திருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (டி.டி.ஏ.ஏ) (Double Taxation Avoidance Agreement (DTAA)) ஆகியவை இதற்குக் காரணம் ஆகும்.

“ஒரு நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் 180 நாட்களுக்கு மேல் வாழ்ந்தால், அவர் தானாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் (Resident of UAE) ஆகிவிடுவார்.  மேலும் மீதமுள்ள நாட்கள் (240 நாட்களில்), அவர் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, மொத்தம் இந்தியாவுக்கு வெளியே 240 நாட்களுக்கு மேல் வாழ்ந்தால், அவருடைய இந்திய வருமானத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படும். அவர் NRI என்றே கருதப்படுவார்.” என்று வரி வல்லுநர்கள் DMCC-ன் இயக்குனர் தீட்சித் ஜெயின் கூறினார்.

முன்னதாக, 182 நாட்கள் இந்தியாவுக்கு வெளியே ஒரு இந்திய குடிமகன் தங்குகிறார் என்றால், அவர் NRI (Non-Resident Indian) ஆகிவிடுவார். இப்போது, ​​அந்த சட்டம் மாற்றப்பட்டு, ஒருவர் இந்தியாவுக்கு வெளியே 240 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் இருந்தால் தான் அவர் NRI ஆவார் (வரி நோக்கங்களுக்காக) என்று மாற்றப்பட்டுள்ளது.

அதாவது வரி நோக்கங்களுக்காக ஒரு இந்திய குடிமகன் நாட்டிற்கு வெளியே மொத்தம் 240 நாட்கள் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் ஒரே ஒரு நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ மட்டும் வசிக்கத் தேவையில்லை (not required to reside in any one country or territory). அதற்கு பதிலாக, அவர்கள் அந்தந்த நாடுகளின் குறைந்தபட்ச வரி வதிவிட தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வரி ஆலோசகர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வணிக உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்களா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய வணிக உரிமையாளர்கள் வதிவிட நிலை குறித்த புதிய விதிகள் (new rules for residency status) மற்றும் அதன் சாத்தியமான வரி தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்தியாவில் 120 நாட்களுக்கு கீழ் தங்கியிருந்தால் மற்றும் தங்கள் வணிகங்கள் அமைந்துள்ள நாடுகளில் தங்கள் வரி வதிவிடத்தை நிரூபிக்க முடிந்தால் (able to prove their tax residency in the countries where their businesses are located), வருமான வரி விதிகளில் புதிதாக முன்மொழியப்பட்ட மாற்றங்களால் பாதிக்கப்படமாட்டார்கள்.

வணிக உரிமையாளர்களின் கவலையும் கோரிக்கையும்:

இத்துடன் “வரி விலக்கு (Tax exemption) பெற ஒரு NRI, இந்தியாவில் செலவிடக்கூடிய நாட்களின் எண்ணிக்கை 182 நாட்களில் இருந்து 120 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் மேற்கொண்ட வணிகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஆஸ்டர் டி.எம் ஹெல்த்கேர் (Aster DM Healthcare)-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆசாத் மூபன் கூறியுள்ளார்.

அதாவது “எங்கள் இந்திய-பட்டியலிடப்பட்ட (India-Listed) நிறுவனத்தில், இந்தியாவில் 13 மருத்துவமனைகள் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளன, அதேசமயம் GCC-ல் 12 மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. மொத்தம் எங்களின் 20,000 ஊழியர்களில், பெரும்பான்மையானவர்கள் இந்தியாவில் தான் உள்ளனர். இதனால் என்னைப் போன்ற வணிகர்களுக்கு இயற்கையாகவே இந்தியாவில் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளன.” என்றார் அவர்.

“ஒரு வருட வேலைக்குப் பிறகு ஒரு மாத விடுமுறை பெறும் வெளிநாட்டு நிறுவன ஊழியர்களைப் போன்ற மற்றவர்களின் விஷயத்திலும் கூட, இது ஒரு பெரிய பாதகமாக இருக்கும். இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அனைவரும் கோருங்கள்.” என்ற கோரிக்கையை அனைவரின் முன் வைத்துள்ளார்.

குழப்பமடைந்த நிலை:

இதன் மூலம் புதிய திட்டங்கள் அனைத்து வகைகளிலும் உள்ள வெளிநாட்டினரிடையே பீதியை உருவாக்கியுள்ளன என்பது தெளிவாகிறது. “அவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் தங்கள் வருமானத்திற்கு வரிவிதிப்பு செய்வதில் பீதியடைந்துள்ளனர். இதில் NRI வைப்புத்தொகை மீதான வட்டி வருமானம் பற்றிய குழப்பங்களும் அடங்கும்” என்று துபாயின் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டரெட் அக்கவுண்டண்ட்ஸ் ஆப் இந்தியா-ன் தலைவர் (chairman of the Institute of Chartered Accountants of India, Dubai) அனிஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

மேலும் “மத்திய கிழக்கில் உள்ள வெளிநாட்டினரிடையே இதுபோன்ற பீதியைத் தவிர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து அரசாங்கம் சிறந்த விளக்கங்களை அளித்திருக்க வேண்டும்.” என்று தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

NRI பற்றி மக்களின் நிலை:

NRI – பற்றிய இந்த கருத்து, அனைத்து வெளிநாட்டவர் மனதிலும் “இந்தியாவில் தங்களின் வரி நிலை என்ன?” என்று கவலைக்கொள்ள வைத்துள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் மாற்றத்தினால் இப்போது தனிநபர்கள் தங்களை இந்தியாவின் வரி செலுத்தும் குடியிப்பாளர்கள் (not a tax resident of India) அல்ல என்பதை நிரூபிப்பதற்கு கடினமாக்கி உள்ளது என்பது தான் உண்மை.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!