கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் திறன் வாய்ந்த மருந்தாகக் கண்டறியப்பட்டது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine,HCQ) மாத்திரை தான். இந்த மாத்திரைகளை ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முன்னர் ஆர்டர் செய்திருந்தது. இதனை விரைவாக வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பாக கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா முதலாவதாக சுமார் 5.5 மில்லியன் மாத்திரைகளை அமீரகத்திற்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் இருக்கும் அமீரக தூதரகம் சனிக்கிழமை(18/04/2020) இரவு தங்களது ட்விட்டர் பக்கத்தில் “கோவிட் – 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முதலாவதாக 5.5 மில்லியன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதற்கு தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கிய இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.” என்று தெரிவித்தது.
The first shipment of medicine, currently on its way to the #UAE, includes 5.5 million pills for treatment of patients with #Covid_19. We highly appreciate the cooperation of the Indian government in facilitating the procedures for obtaining the necessary approvals .
— UAE Embassy-Newdelhi (@UAEembassyIndia) April 18, 2020