Tamil Reader

வீடியோ: அம்மா னா சும்மா இல்ல டா… யானைக்கு சோரு ஊட்டிய மூதாட்டி!

பெரிய யானை ஒன்றுக்கு மூதாட்டி ஒருவர் அனாயசமாக உணவு ஊட்டும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. கேரளாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. பெரிய தந்தம் வைத்த யானை ஒன்று வீட்டின் முன் வந்துள்ளது. அந்த யானைக்கு வாலியில் உணவு கொண்டு வந்து தாயுள்ளத்தோடு உருண்டை பிடித்து மூதாட்டி ஒருவர் யானையின் வாயில் ஊட்டி விடுகிறார். யானையும் பவ்வியமாக மூதாட்டியின் உணவை ருசி பார்த்தது. குழந்தையை போல உணவு கொண்டு வருவதற்கு முன்பே யானை வாயை பிளந்தவாறு காட்சியளித்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அன்பும் அரவணைப்பும் இருந்தால் யானையும் குழந்தையாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் யானை விளங்கியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

இதையும் படிங்க.!