Tamil Reader

இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை 60 சதவிகிதம் இயக்கலாம் – விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி..!

FLIGHT

இந்தியாவில் விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமானங்களை 60 சதவிகிதம் வரை இயக்க இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதன்பின்னர் குறைவான எண்ணிக்கையில் மீண்டும் துவங்கப்பட்டன. மே மாத இறுதியில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் 33 சதவிகித எண்ணிக்கையில் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கையை ஆகஸ்டு மாத துவக்கத்தில் 45 சதவிகிதமாக அதிகரித்தது விமானப் போக்குவரத்து அமைச்சகம். தற்போது இது 60 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு 1000 விமானங்கள்

இந்தியாவில் ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாளைக்கு 1000 விமானங்கள் என்ற வீதத்தில் வணிக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று இந்தியாவில் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,121 ஆகும்.

கொரோனா பெருநோய் காலத்திற்கு முன்னர் இந்தியாவில் சராசரியாக ஒருநாளைக்கு 2500 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோ

ஒருநாளைக்கு இந்தியாவிற்குள் அதிக விமானங்களை செலுத்தும் பட்டியலில் இண்டிகோ சக போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகிக்கிறது. இண்டிகோ விமான நிறுவனம் ஒருநாளைக்கு 583 விமானங்களை இயக்குகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 183 விமானங்களையும் மற்ற விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, அல்லயன்ஸ் ஏர், விஸ்டாரா, ஏர் ஏசியா ஆகியவை ஒரு நாளைக்கு 100 க்கும் குறைவான விமானங்களையே இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!