Tamil Reader

துபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்; சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பார்சல்கள்..!

Chennai Airport Passenger View

துபாயில் இருந்து பிரிண்டிங் பிரஸ்களில் பயன்படும், அச்சு மை தயாரிக்கும் பவுடர் என்ற பெயரில் 20 கொரிய பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.

இந்த பார்சல்கள் மீது சந்தேகம் எழுந்தததை அடுத்து, அதில் இருந்த முகவரி மற்றும் போன் நம்பரை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர், அதில் அந்த பார்சல்கள் போலி என்று தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அதில் ஒரு பார்சலை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அதில் இருந்த பவுடர் தங்கம் போல் மினுமினுப்பாக இருந்ததால் தண்ணீரில் கரைத்து பார்த்தபோது, அவை தங்கத்தை பொடியாக்கி பவுடருடன் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், அனைத்து பார்சல்களையும் பிரித்து அந்த பவுடர்களை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தங்கப்பவுடரை தனியே பிரித்து எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

அதில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான தங்கப்பவுடர் கிடைக்கும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதுவடிவில், நூதன முறையில் அரங்கேறிய இந்த தங்கம் கடத்தல் சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Daily Thanthi

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!