Tamil Reader

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்வீட்..!

24sachin1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனக்கு கொரோனா தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

“லேசான அறிகுறிகள் வந்ததைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ள அனைவருக்கும் நெகட்டிவ் என வந்திருக்கிறது. இப்போது எனது வீட்டில் டாக்டர்கள் அறிவுரைக்கு ஏற்ப குவாரண்டைன் செய்துகொண்டுள்ளேன். என்னையும் என்னைப் போன்றவர்களையும் கண்காணித்துவரும் நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சச்சின் விரைவில் குணமடைந்து வர அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!