Tamil Reader

இந்திய அரசின் உத்தரவை மீறி விமான டிக்கெட்டுகளை விற்கும் விமான நிறுவனங்கள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவுக்கு பிறகு விமான சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கலாம் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் சில விமான நிறுவனங்கள் அதனை பொருட்படுத்தாமல் டிக்கெட் விற்பனை செய்து வருகின்றனர். உள்ளூர் சந்தையில் 80% ஐக் கட்டுப்படுத்தும் நாட்டின் முதல் ஆறு விமானங்களில் நான்கு, மே மூன்றாவது வாரத்தில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் என்று அவற்றின் வலைத்தளங்களில் தேடல்கள் காட்டின.

மே 3 ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு முடிவடைந்த பின்னர் விமானங்களை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறிய போதிலும், விமான டிக்கெட்டுகள் விற்பது நிறுத்தப்படவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொரோனா வைரஸின் பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை எந்தவொரு வணிக விமானங்களும் இயக்க அனுமதிக்கப்படாது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீண்டும் வலியுறுத்தினார்.

இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்கள் மே 1 முதல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுயள்ளன.

ஸ்பைஸ்ஜெட், கோ ஏர்லைன்ஸ் இந்தியா நிறுவனங்கள், மே 16 முதல் டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றன என்றும், அரசு நடத்தும் ஏர் இந்தியா லிமிடெட் வலைத்தளங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மற்ற சில பதிவுகள்