Tamil Reader

வலையில் தங்க மீன்கள் – ஒரேநாளில் கோடீஸ்வரனான மீனவர்!

மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. மீனவரான இவர், மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த மாதம் 28ம் தேதி, முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற சந்திரகாந்துக்கு முதல் நாளே ஜாக்பாட் அடித்தது. சந்திரகாந்த் வீசிய வலையில் 157 கோல் மீன்கள் எனப்படும் தங்க மீன்கள் சிக்கின. கோல் மீன் எனப்படும் இந்த மீன்கள் உணவுக்கு மட்டுமின்றி மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. கோல் மீன்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ். இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மீன்களுக்கு அதிகளவில் டிமாண்ட் உள்ளது. நல்வாய்ப்பாக கிடைத்த மீன்களை கரை திரும்பியதும் சந்திரகாந்த் ஏலத்தில் விட்டார். அதில் அவருக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் கிடைத்தது. ஒரேநாளில் மீனவர் கோடீஸ்வரரான சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க.!