Tamil Reader

கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 60 வயதாகும் வரையில் அவர்களது குடும்பத்திற்கு முழு சம்பளம்; குழந்தைகளுக்கு இலவச கல்வி – டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவிப்பு..!

ratan tata

தனது பணியாளர்களில் யாராவது கொரோனாவல் உயிரிழந்தால் அவரது 60 வயதுவரை அதாவது அவர் பணியில் இருந்து ஓய்வுபெறும் வரையில் அவரது குடும்பத்திற்கு முழு ஊதியம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல, கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களின் குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரையில் அனைத்து கல்விச் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வசிக்க வீடு மற்றும் இதர அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா நிறுவனத்தின் இந்த அறிவிப்பை பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

இதையும் படிங்க.!