Tamil Reader

ஜூலை 31 வரை இந்தியாவில் சர்வதேச விமானங்கள் இயங்காது..!

Air India Express Flight

கொரோனா காரணமாக இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் (scheduled international passenger flights) இயங்க மார்ச் 23 ஆம் தேதியிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கவே இந்தத் தடையை ஜூலை 15 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (Directorate General of Civil Aviation) கடந்த ஜூன் 26 ஆம் தேதி வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் DGCA இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் இந்தியாவில் சர்வதேச விமானங்கள் இயங்குவதற்கான தற்காலிக தடை ஜூலை 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், DGCA வால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும், அத்தியாவசிய தேவை இருந்தால் குறிப்பிட்ட இலக்குகளுக்கு திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் எனவும் DGCA அறிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டுமாத இடைவெளிக்குப் பிறகு மே 25 ஆம் தேதிமுதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீண்டும் தாயத்திற்கு அழைத்துவரும் நோக்கில் இந்திய அரசால் துவங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா மற்றும் சில தனியார் உள்நாட்டு விமான நிறுவனங்கள் முன்திட்டமிடப்படாத சர்வதேச விமான போக்குவரத்தை மேற்கொண்டுவருகின்றன.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!