Tamil Reader

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை ஜூன் 30 ஆம் தேதிவரை நீட்டித்த அரசு..!

chennai-AIRPORT

கொரோனா முதல் அலையின் போதே, அதாவது கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை அறிவித்தது இந்திய அரசு.

இருப்பினும் வந்தே பாரத் மிஷன் என்னும் சிறப்பு போக்குவரத்துத் திட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையே விமானங்களை விமானப் போக்குவரத்து நடைபெற இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை ஜூன் 30 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் (டி.ஜி.சி.ஏ.) நேற்று அறிவித்து உள்ளார்.

எனினும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் சிறப்பு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாகவும் டி.ஜி.சி.ஏ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சரக்கு விமான போக்குவரத்தை இந்த தடை பாதிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!