Tamil Reader

35 கிலோமீட்டர் வரை ரயிலை பின்னோக்கி இயக்கிய ஓட்டுனர்: காரணத்தைக் கேட்டு கடுப்பான அதிகாரிகள்..!

train

டெல்லி – உத்தரகாண்ட் இடையே இயக்கப்பட்ட ரயில் திடீரென 35 கிலோமீட்டர் வரை பின்னோக்கி பயணித்ததால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூருக்கு சென்று கொண்டிருந்த போது ரயில்வே இருப்புப் பாதையில் பசுக்கூட்டம் நின்றிருக்கிறது. இதனால் ரயிலை நிறுத்த முயற்சித்த ஓட்டுனருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரயிலில் பிரேக் அமைப்பு வேலை செய்யவில்லை. இதனால் ரயில் பின்னோக்கி நகரத் துவங்கியிருக்கிறது

அந்நேரம் பார்த்து தவறை சரிசெய்யவும் அவரால் முடியவில்லை. ஆரம்பத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த பயணிகள், கிலோமீட்டர் கணக்கில் ரயில் பின்னோக்கிச் செல்வதைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவழியாக 35 கிலோமீட்டர் பின்னோக்கிச் சென்று ரயிலானது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த ஓட்டுனர் மற்றும் அதற்குத் துணை நின்ற கார்டு ஆகிய இருவரையும் தற்காலிக இடைநீக்கம் செய்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

இதையும் படிங்க.!