Tamil Reader

கொரோனாவால் மருத்துவமனையில் தவிக்கும் தாய், தந்தை – 6 மாத குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் டெல்லி காவல்துறை அதிகாரிகள்..!

intl_india_andrea_Zodge_

டெல்லியில் தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா தாக்குதல் கண்ட நிலையில் 6 மாத குழந்தைக்கு ஆதரவு அளித்துவருகிறது டெல்லி காவல்துறை. இதனையடுத்து பலரும் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டி வருகின்றனர்.

டெல்லியின் ரேடியோ காலணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு போன்கால் வந்திருக்கிறது. போனில் பேசிய நபர், தனது உறவினர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகியிருக்கிறது. இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு 6 மாத குழந்தை இருக்கிறது. ஏதாவது உதவி செய்யமுடியுமா? எனக் கேட்டிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற காவல்துறை அதிகாரிகள், தாங்களே முன்வந்து குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையால் கடுமையான இழப்பை டெல்லி சந்தித்து வரும்வேளையில் இந்த காவல்துறை அதிகாரிகளின் மனிதநேயம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

இதையும் படிங்க.!