Tamil Reader

விற்பனைக்கு வருகிறது கொரோனா டெஸ்ட் கிட் – இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் – பயன்படுத்துவது எப்படி?

202105200231388157_Covid-Home-Test-Kit-Gets-Approval-Guidelines-Out-On-Who_SECVPF

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா அறிகுறியோடு இருப்பவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் வீட்டிலிருந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவியினை தயாரித்துள்ளது மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம்.

கோவிசெல்ஃப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசோதனைக் கருவியினைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கர்ப்ப பரிசோதனை போலவே மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரி கொண்டு இந்தக் கருவி மூலமாக கொரோனா இருக்கிறதா? என்பதை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம்.

இதனைப் பயன்படுத்துவது எப்படி?

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கோவிசெல்ஃப்’ அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெயர், வயது, முகவரி, அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

‘கோவிசெல்ஃப்’  செயலியில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். 15 நிமிடங்களில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் முடிவு ஆப்பிலேயே காட்டும்.

பரிசோதனை முடிவுகள், தரவுகள் அனைத்தும் ஐ.சி.எம்.ஆரின் பரிசோதனை தளத்துடன் இணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பான ‘சர்வரில்’ சேமிக்கப்படும்.
‘கோவிசெல்ஃப்’ கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும்; மீண்டும் பரிசோதனை தேவையில்லை. ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என, வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் RT-PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்பு:

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில் இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் மருந்துக் கடைகளில் இந்தக் கருவி விற்பனைக்குக் கிடைக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பலராம் பார்கவா தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க.!