இந்தியாவில் மேலும் ஒரு நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (மார்ச் 6) தெரிவித்துள்ளது.
இந்த புதிய சம்பவம் மூலம், இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
இதில் COVID-19 சந்தேகத்திற்குரிய நபருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சமீபத்திய நபர் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும், அவர் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அவர், சீராகவும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
மற்ற நபர்கள்
இது தவிர, 30 நோய்த்தொற்று நபர்களில் முந்தைய மூன்று சம்பவங்கள் கேரளாவை சேர்ந்தது, தற்போது அவர்கள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, டெல்லி-NCR இல் மூன்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் இரண்டு பேர் இத்தாலிக்கும், மேலும் ஒருவர் ஈரானுக்கும் பயணம் மேற்கொண்டவர்கள்.
அனைவரும் சீராகவும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருவதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.