Tamil Reader

துபாயில் இருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!

Coronovirus

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்திவரும் COVID-19 என்னும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்திய நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தமிழகம், கேரளா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுவரை 44 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும், துபாயில் இருந்து இந்தியா வந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

Source : News7Tamil

இதையும் படிங்க.!