Tamil Reader

இந்தியாவில் சர்வதேச விமான சேவை மார்ச் 31 ஆம் தேதிவரை ரத்து – இந்திய அரசு அறிவிப்பு..!

flight

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு (international commercial passenger flight) விதிக்கப்பட்ட தடையை மார்ச் 31, 2021 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக இந்திய சிவில் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (DGCA) அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் 23 ஆம் தேதிமுதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு இந்தியா தடை விதித்திருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து மற்றும் இந்தியாவிற்கு இயக்கப்படும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிவரையில் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதாக DGCA தெரிவித்துள்ளது.

இருப்பினும் சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான திட்டமிடப்பட்ட விமான சேவை தேவையின் பொருட்டு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கோ விமானங்கள் மற்றும் DGCA வால் சிறப்பு அனுமதிபெற்ற விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

கடந்த ஜூலை முதல் வந்தேபாரத் திட்டம் மற்றும் ஏர் பபிள் மூலமாக குறிப்பிட்ட சில நாடுகளுக்கிடையே இந்திய அரசு விமானப் போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதியளித்தது நினைவிருக்கலாம்.

அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், அமீரகம், கென்யா, பூட்டான், மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே இந்தியா ஏர் பபிள் ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏர் பபிள் ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச விமானங்களை இரு நாடுகளுக்கிடையே இயக்க இந்தியரசு அனுமதியளித்திருந்தது.

இதையும் படிங்க.!