Tamil Reader

COVID-19 தொற்­று: விமான நிறுவன ஊழியர் உயிரிழப்பு..!

இண்டிகோ விமான நிறு­வன ஊழி­யர் ஒரு­வர் COVID-19 தொற்­றுப் பாதிப்­பால் உயிரிழந்­தி­ருப்­பது விமா­னப் போக்­கு­வ­ரத்­து ஊழி­யர்­கள் மத்­தி­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

50 வய­தான அந்த ஆட­வர் பொறி­யி­யல் பிரி­வில் பணி­யாற்றி வந்துள்­ளார்.

அந்த விமான நிறு­வ­னத்­தின் ஊழி­யர் கடந்த 2006ஆம் ஆண்டு பணி­யில் சேர்ந்துள்ளார்.

“இது எங்­கள் அனை­வ­ருக்­கும் துய­ரத்தை ஏற்­ப­டுத்தி உள்ள ஒரு நிகழ்வு. பாதிக்கப்பட்ட நபர் குறித்­தும் அவ­ரது குடும்­பத்­தார் குறித்­தும் எந்­த­வித விவரங்களையும் வெளி­யிட இய­லாது.”

“அதே­ச­ம­யம் உயி­ரி­ழந்த ஊழி­ய­ரின் குடும்­பத்­தி­ன­ருக்கு அனை­வ­ரும் உறு­து­ணை­யாக இருப்­போம்,” என அந்த விமான நிறு­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் தெரிவித்துள்ளார்.

நாட்­டில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யைச் சார்ந்த ஒரு­வர் கொரோனா தொற்றால் உயி­ரி­ழந்­தி­ருப்­பது இதுவே முதன்­முறை.

உல­கம் முழு­வ­தும் பெரும்­பா­லான நாடு­களில் விமா­னச் சேவை முடங்­கி­யுள்­ளது. இதனால் பல்வேறு விமான நிறு­வனங்கள் பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!