Tamil Reader

இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைகளின் முன்பதிவு தொடங்குவது பற்றி ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!

Air India

இந்தியாவில் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1ஆம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மாதம் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், மே 3ஆம் தேதிக்குப் பிறகு, மத்திய அரசு என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.

எனினும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வரும் 20ஆம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள், சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

மே 3ஆம் தேதி முதல் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைய கூடிய உள்ள நிலையில் அடுத்தகட்ட கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கக்கூடும் என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வரும் நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனமானது தனது விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும். மே 4ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல், ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!