இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் வூஹான் வைரஸ் தொற்று ஒருவருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஜன. 30) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவின் முதல் வூஹான் வைரஸ் பாதிப்பு சம்பவம் இது ஆகும்.
இதில் வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபர் சீனாவில் வூஹான் பல்கலைக்கழக மாணவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் சீரான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update on #Coronavirus incident: A patient has been tested positive for Novel #Coronavirus infection and is kept in isolation.The infected patient is a student of Wuhan University. We are closely monitoring the situation.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) January 30, 2020
உலகை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வருகிறது, மேலும் இதில் 170 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.