Tamil Reader

துபாயில் இருந்து இந்தியா திரும்பிய நபர்; COVID-19 சோதனை செய்யாமல் தப்பியோட்டம்..!

Covid 19

துபாயில் இருந்து இந்தியாவின் கர்நாடகா மாநிலம் மங்களூர் விமானநிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் மருத்துவமனை வரும் படி அறிவுறுத்தபட்டது.

ஆனால் அவர் சோதனைக்கு வராமல் தப்பி சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா அறிகுறி உள்ள அந்த பயணியை மங்களூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சோதனைக்காக வரும்படி அறிவுறுத்திய நிலையில், அவர் அங்கு வரவில்லை என தெரிகிறது.

அந்த பயணியை வென்லாக் மருத்துவமனை வரும் படி அறிவுறுத்திய நிலையில், அவர் மருத்துவமனை வரவில்லை என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அந்த பயணி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த பயணியின் வீட்டில் கண்காணிப்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்படுவார் என அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

கூடுதலாக, தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : NDTV

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!